17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா எதிரொலி சுரண்டையில் 3 நாட்கள் தொடர்ந்து முழு ஊரடங்கு கடைகள் அடைப்பு..

கொரோனா எதிரொலி சுரண்டையில் 3 நாட்கள் தொடர்ந்து முழு ஊரடங்கு கடைகள் அடைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2020, 12:46 pm

சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எதிரொலியாக சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் 3 நாட்கள் தொடர்ந்து முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சுரண்டை மற்றும் வீகேபுதூர் தாலுகா பகுதிகளில் இன்று முதல் 3 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின் பேரில் வீ.கே.புதூர் தாசில்தார் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து (17.05.2020) காலை முதலே சுரண்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன, பால், மெடிக்கல் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருந்தன. வாகனங்கள் ஏதும் இயங்கவில்லை‌. எப்போதும் பரபரப்பாக செயல்படும் காமராஜர் காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டு வெறிச்சோடியது. மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை முன்னிட்டு வீகேபுதூர் தாசில்தார் ஹரிஹரன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார், டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கண்மணி மற்றும் அரசு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!