18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைரோடு அருகே குடிமராமத்து பணியை தமிழக வனதுறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

கொடைரோடு அருகே குடிமராமத்து பணியை தமிழக வனதுறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

எழுதியவர்: mohan May 17, 2020, 9:54 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறுமலை ஆறு அணையின் ஒரு பகுதியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து ரூபாய் 90 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. பூஜைக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திட்டப் பணியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் . தேன்மொழி சேகர் நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன் , முன்னாள் திண்டுக்கல் பாராளமன்ற உறுப்பினர் உதயகுமார் , நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம், அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் தண்டபாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், நீதிபதி, நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், முன்னால் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, சிறுமலையாறு நீர்த்தேக்க விவசாயிகள் சங்க துணைத்தலைவர் சித்தன், பொறுப்பாளர்கள் சுபாஷ் சந்திர போஸ், கணேசன், உட்பட விவசாய சங்கத்தினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!