18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல எதிர்ப்புகளை மீறி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மதுபானகடைகள் இன்று தமிழகமெங்கும் திறப்பு..

பல எதிர்ப்புகளை மீறி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மதுபானகடைகள் இன்று தமிழகமெங்கும் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2020, 7:32 pm

16/05/20 இன்று சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தை தவிர்த்து தமிழகமெங்கும் திறக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில் ஆத்தூர் தாலூகா செம்பட்டி அருகே உள்ள புதுகோடாங்கி பட்டியில் இயங்கி வரும் மதுபான கடையின் முன்பு காலை முதலே மதுபானம் வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க்கத் தொடங்கினர்.

முகக்கவசம் அனியாமல் வந்தவர்களுக்கு அருகிலேயே முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டது. செம்பட்டி காவல்துறையினரும், (FOP) ஆகிய காவலர்களின் நண்பர்களும் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டனர். அரசு விதித்துள்ள விதிமுறைகளுக்குட்பட்டு மதுவாங்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!