தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு கடற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக காற்று மணிக்கு 60 முதல் 65 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும். அடுத்த இரண்டு நாட்களில் (மே 17, மே 18)
காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்பதால் நாட்டுப்படகு, கண்ணாடி இழை படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கரை ஓரங்களில் மட்டும் மீன்பிடிக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.புயல் குறித்து எச்சரிக்கை எதுவும் ஏற்பட்டால் உடனே கரைக்கு வந்துவிடவேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
எழுதியவர்: mohan May 16, 2020, 4:36 pm




You must be logged in to post a comment.