மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகின்றது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று
நள்ளிரவு உசிலம்பட்டி அருகே உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இதில் தும்மக்குண்டு அருகே உடையான்பட்டி சின்ன உடையான்பட்டி ஆகிய பகுதிகளில் நடப்பட்டு இருந்த பப்பாளி மரங்கள் காற்றில் ஒடிந்து விழுந்தன.இதனால் பல ஏக்கர் பப்பாளி மரங்கள் கீழே விழுந்து நாசமாயின.ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறற முடியயாத நிலையில் விவசாயப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை.இந்நிலையில் இருக்கும் பணத்தை வைத்து விவசாயிகள் விவசாயப் பணியை ஆரம்பித்த நிலையில் பட்ட காலிலேயே படும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகளுக்கு மழை மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால் விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே காற்றுடன் கூடிய மழை பெய்ததில் பல ஏக்கர் பப்பாளி மரங்கள் காற்றில் சாய்ந்து நாசமடைந்தன.
எழுதியவர்: mohan May 16, 2020, 2:20 pm




You must be logged in to post a comment.