17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நம்ம வீட்டு சாப்பாட்டை விட அம்மா உணவகம் சாப்பாடு ஆஹா சூப்பர்! செல்லூர் ராஜு பெருமிதம்!

நம்ம வீட்டு சாப்பாட்டை விட அம்மா உணவகம் சாப்பாடு ஆஹா சூப்பர்! செல்லூர் ராஜு பெருமிதம்!

எழுதியவர்: mohan May 16, 2020, 2:13 pm

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் ஆட்சியர் வினய், ஆணையாளர் விசாகன் ஆகியோர் உடன் உள்ளனர். அதனையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளிக்கையில், நம் வீட்டில் கூட சாப்பாடு சரியாக இருக்காது ஆனால், அம்மா உணவகத்தில் சாப்பாடு நன்றாக உள்ளது. இந்த மாதம் 9ம் தேதி 15 149270 முட்டை, 11000 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். கடந்த மாதம் 23ம் தேதி முதல் நேற்று வரை 5லட்சத்து 99 ஆயிரத்து 812 பேர் பயன் அடைந்துள்ளனர். கொரானா பாதிப்பு ஊரடங்கு உத்தரவு போன்ற முடிவுகளை பார்த்து, மாவட்ட ஆட்சியர் முடிவுகளை தொடர்ந்து அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு செயல்படுத்தப்படும்.சட்டத்தால் மக்களை ஒரு போதும் திருத்த, கட்டுப்படுத்த முடியாது. அவர்களாகவே திருந்திக்கொள்ள வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட சேரிப்பகுதிகளில் மாஸ் கிளினிங் முறையில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதுஇவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.. இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!