மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூர் போலிசார் சார்பு ஆய்வாளர் லிங்குசாமி தலைமையில் கல்யாணி பட்டி விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில்
வந்த டாடா சுமோவை மடக்கி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் பதிலளிக்க வேகமாவில் சோதனை செய்தனர்வாகனத்தில் வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் கறி மருந்து டெட்டனேட்டர் குச்சிகள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக உத்தப்ப நாயக்கனூர் போலிசார் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆரோக்யம் மகன் பர்ணா பால் (47) ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சபரி மகன் பிரபாகரன் (30) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 950 டெட்டனேட்டர் குச்சிகள் 250 கிலோ கறி மருந்து ஆகியவற்றையும் ஒரு டாடா சுமோவையும் பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே போலிசார் வாகன சோதனையில் வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் பொருளுடன் இருவர் கைது .
எழுதியவர்: mohan May 16, 2020, 11:27 am




You must be logged in to post a comment.