17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் பெண் சிசுக் கொலையா

சோழவந்தானில் பெண் சிசுக் கொலையா

எழுதியவர்: mohan May 16, 2020, 10:11 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் தவமணி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 3பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10ந்தேதி மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மீண்டும் 4 வதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்து 4நாட்கள் ஆன நிலையில் அந்த குழந்தை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். ஆனால் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சோழவந்தான் போலீசார் வழக்குபதிவு செய்து பெண் சிசுக்கொலையாக இருக்காலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்டுள்ளனர்.மேலும் மதுரை ஆர்.டி.ஒ மேற்பார்வையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் வைத்தே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!