18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே தீ விபத்தில் 20 ஆடுகள் கருகி பலி..

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே தீ விபத்தில் 20 ஆடுகள் கருகி பலி..

எழுதியவர்: Askar May 15, 2020, 11:38 pm

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே தீ விபத்தில் 20 ஆடுகள் கருகி பலி..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரம் கிராமத்தில் வீரசூரன் என்பவரது ஆட்டுக்கொட்டத்தில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க கடும் முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் தீயணைப்புத்துறையினர் வரும் முன்பே ஆட்டுக்கொட்டகையில் இருந்த 20 ஆடுகளும் காற்றின் வேகத்தில் தீயில் எரிந்து கருகி பலியாகின. ஒருசில ஆடுகள் பாதி கருகிய நிலையில் நின்றவாறு கத்திக்கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது. தீயணைக்க முயற்சி செய்த விவசாயி வீரசூரனும் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. A. சாதிக் பாட்சா நிருபர்,தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!