17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முல்லைப் பெரியார் அணைப் பகுதியில் தொடர் மழை:அணைக்கு வினாடிக்கு 684 கன அடி நீர்வரத்து. விவசாயிகள் மகிழ்ச்சி..

முல்லைப் பெரியார் அணைப் பகுதியில் தொடர் மழை:அணைக்கு வினாடிக்கு 684 கன அடி நீர்வரத்து. விவசாயிகள் மகிழ்ச்சி..

எழுதியவர்: Askar May 15, 2020, 11:33 pm

முல்லைப் பெரியார் அணைப் பகுதியில் தொடர் மழை.அணைக்கு வினாடிக்கு 684 கன அடி நீர்வரத்து. விவசாயிகள் மகிழ்ச்சி..

தேனி,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீராதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. 142 அடி வரை நீர் தேக்க கூடிய முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாததால் அணையின் நீர்மட்டம் 113 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேக்கடி,பெரியாறு அணைப்பகுதி ஆகிய இடங்களில் கணிசமாக மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு தேவையான ஆரம்ப காலகட்ட நீர் வரத்து சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது இதனால் விவசாயிகள் கோடை காலங்களில் வரும் நீர் தட்டுபாடு பிரச்சனைகள் குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 A. சாதிக் பாட்சா நிருபர்தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!