18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளம் திமுக MLA கே. எஸ்.சரவணகுமார் நகராட்சி நிர்வாகத்தை ஆய்வு செய்தார்!

பெரியகுளம் திமுக MLA கே. எஸ்.சரவணகுமார் நகராட்சி நிர்வாகத்தை ஆய்வு செய்தார்!

எழுதியவர்: Askar May 15, 2020, 11:28 pm

பெரியகுளம் திமுக MLA கே. எஸ்.சரவணகுமார் நகராட்சி நிர்வாகத்தை ஆய்வு செய்தார்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்களிடம் 6,7,8,9 உள்ளிட்ட வார்டுகளில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினைகள் இருப்பதை அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர் மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை உடைந்து மேலே கழிவு நீர் வெளியேறுவதையும் புகாரளித்தனர், அதனைத் தொடர்ந்து பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான பெரியகுளத்தின் முக்கிய மையப் பகுதியில் உள்ள தண்டுபாளையம் பாலத்தில் இரு புறமும் மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் நபர்களும் பெரும் சிரமத்தில் உள்ளனர். இது போன்ற பல்வேறு குறைபாடுகளை பெரியகுளம் நகராட்சி ஆணையர் அசோக் குமார் அவர்களிடம் சுட்டிக்காட்டி அதனை சரிசெய்யுமாறு அறிவுறித்தினார். உடன் நகர்நல அலுவலர் தினேஷ் குமார், சுகாதார ஆய்வாளர்கள் அசைன் முகம்மது, அலக்ஸ்டாண்டர் மற்றும் திமுக நிர்வாகிகளான அப்தாஹீர், சாதிக் கலந்துக் கொண்டனர்.

 A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!