17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோயில் பூசாரிகள், இலங்கை அகதிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக., இளைஞரணி நிவாரணம்..

கோயில் பூசாரிகள், இலங்கை அகதிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக., இளைஞரணி நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் May 15, 2020, 8:26 pm

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டலில், மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஒப்புதலுடன் மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு ஒரு வார காலத்திற்கு தேவையான அரிசி, காய்கறி தொகுப்பு இன்று வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் அருகே அத்தியூத்து கிராம கோயில் பூசாரிகள் சங்கம் வேண்டுகோள் படி சார்பாக நலிந்த பூசாரிகளுக்கு  ஒரு வார காலத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு  இராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு,ராமநாதபுரம்  ஒன்றிய செயலர் கே.டி.பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் ஈஸ்வரி கருப்பையா,  ராமநாதபுரம்  ஒன்றிய துணைச் செயலர் வி.சி.கே. புகழேந்தி, ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தராஜன்,  மண்டபம் பேரூர் செயலர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா, சூரக்கோட்டை ஊராட்சி கிளை அவைத்தலைவர் ராஜ்குமார், பிரதிநிதி செந்தில்குமார், அப்பாஸ் கனி,  வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுரேஷ் மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!