18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் மாங்காய் கூடுதல் விலை போகாததால் விவசாயிகள் நஷ்டம்!

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் மாங்காய் கூடுதல் விலை போகாததால் விவசாயிகள் நஷ்டம்!

எழுதியவர்: Askar May 15, 2020, 4:02 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. குறைவான விலை நிற்பதனால் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது .

பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம்,ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி,குண்டாங்காடு போன்ற பகுதியில் செந்துரா,பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவா,நீலம், பங்கன்பள்ளி போன்ற 30க்கும் மேற்பட்ட மாம்பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இங்கு விளையும் மாம்பழங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதே போல் மா வகைகளை கொண்டு மாங்கூழ் தயார் செய்ய இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாம்பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி மே மாதம் அறுவடைக்கு தயாராகும். கடந்தாண்டை காட்டிலும் வறட்சியின் காரணமாக மாபூக்கள் குறைந்த அளவே பூத்து இருந்தது மேலும் இப்பகுதியில் கோடை வெயில் தாக்கம் மற்றும் கடுமையான வறட்சியினால் மாம்பூக்கள் கருகி குறைந்தளவே விளைச்சல் ஏற்பட்டது இதனால் நடப்பாண்டில் மா உற்பத்தி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் பாதிப்பினால் இந்த ஆண்டு வெளிமாநிலங்களில் இருந்து வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் மா வாங்கிச் செல்ல வராததால் உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைவான விலைக்கு விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசனாது மாசாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!