18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பேரிடர் கால அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பேரிடர் கால அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கல்

எழுதியவர்: mohan May 15, 2020, 12:47 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை சார்பாக நயினார்கோவில் ஒன்றியம் வல்லம், காச்சான் மற்றும் கரைமேல்குடியிருப்பு கிராமத்தில் கொரோனா பேரிடர் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி  அறிவுறுத்தலின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வல்லம் கிராமத்தில் 15 குடும்பங்கள், கரைமேல்குடியிருப்பு கிராமத்தில் 6 குடும்பங்கள் மற்றும் காச்சான் கிராமத்தில் 8 குடும்பங்களுக்குத் தேவையான 10கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியைப் பின்பற்றி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் இளையான்குடி ஒன்றிய பொறுப்பாளர் சேவியர், நயினார்கோவில் ஒன்றிய மக்கள்பாதை உறுப்பினர்கள் கமலக் கண்ணன், கார்த்திக், தனபால், குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!