மயிலாடுதுறை நகர் பகுதியில் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.நாட்டு மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் “கொரோனா கிருமி நோய் தொற்று” காரணமாக 144-தடை உத்தரவால் பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் மயிலாடுதுறை நகர் பகுதியில் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மயிலாடுதுறை
தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தலைவர் க.ராஜேந்திரன் அவர்களது ஆலோசனையின் பேரில், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.இதில், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெனிபர் ச. பவுல்ராஜ், சிறப்புத் தலைவர் சு. சிவலிங்கம், மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சி. செந்தில்வேல், இ. மதுராந்தகன், காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை பகுதியில் உள்ள சமூக சேவை அமைப்புகள் மூலமாக நலிவுற்ற ஏழை மக்களுக்கு 1000 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம்.
எழுதியவர்: mohan May 15, 2020, 12:14 pm




You must be logged in to post a comment.