இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மண்டபம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 5 குடும்பங்கள் தற்போது கொரோனா பேரிடர் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலைவாய்பு இன்றி எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் இருப்பதாக மக்கள்பாதை இயக்கத்தினருக்கு
தகவல் கிடைத்தது.மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டலின்படி இயங்கும் மக்கள் பாதை மண்டபம் ஒன்றியம் சார்பாக நேரடியாக மக்களை சந்தித்து 5 குடும்பங்களுக்கும் தேவையான அரிசி ,சமையல் எண்ணெய், பருப்பு மற்றும் நோன்பு திறப்பிற்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.மேலும் இராமேஸ்வரம் நகராட்சி சங்குமால் மற்றும் தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள 10 குடும்பங்களுக்கும் 14.05.2020 கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள்பாதை மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு, இராமேஸ்வரம் நகராட்சி பொறுப்பாளர் ஆனந்தராஜ், தங்கச்சிமடம் பொறுப்பாளர் அந்தோணி தினா, தன்னார்வலர் மேரிஸ்டன், சந்தியாரூபன், ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.
இராமேஸ்வரம் & மண்டபம் முகாமில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.
எழுதியவர்: mohan May 15, 2020, 12:09 pm




You must be logged in to post a comment.