17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானா பாதித்த கடலாடி லாரி டிரைவர் பலி

கொரானா பாதித்த கடலாடி லாரி டிரைவர் பலி

எழுதியவர்: mohan May 15, 2020, 11:28 am

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த காசி மகன் அருளானந்தம் (34), கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து ஊர் திரும்பினார். இந் நிலையில் உடல் நலம் பாதித்த அவர் , தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐஎம்சியு வில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் இருந்து திரும்பிய தாக கூறிய அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் கொரானா நோய் தொற்று உறுதியானது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!