18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி-சமூக விலகலை பின்பற்றி வழங்கல்..

திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி-சமூக விலகலை பின்பற்றி வழங்கல்..

எழுதியவர்: Askar May 15, 2020, 9:35 am

திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி-சமூக விலகலை பின்பற்றி வழங்கல்..

சுரண்டை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் அளித்து வருகின்றனர். அந்த வகையில்,சுரண்டை திமுக சார்பில் நிவாரண உதவிகளை தென்காசி தொகுதி எம்பி மற்றும் மாவட்ட செயலாளர் வழங்கினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க சுரண்டை நகர திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் தினம்தோறும் உணவு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சுரண்டை பகுதியில் நலிவடைந்தவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர்களால் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.சமூக சேவகரும் மருத்துவருமான முருகையா முன்னிலை வகித்தார்.அவைத்தலைவர் முத்துப்பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன், சங்கரநயினார், சபர்நிஷா, கணேசன், சசிகுமார், சுதன் ராஜா,  மாடசாமி, சாமுவேல் மனோகர், ராஜேந்திர செல்வன், பண்டாரம், முருகன், சீனிவாசன், ஆறுமுகம் ,அருணா, தனுஷ்கோடி மாரியப்பன், பவுன்ராஜ், சீனுத்துரை, சேகர், ராஜ்குமார் கபில் வாசன், ஞானசீலன், தங்கவேலு, ராமர் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!