18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் கல்லூரியில் பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் கல்லூரியில் பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 11:18 pm

தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவிற்கு செல்லும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகு 250க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் கல்லூரியில் தங்க வைப்பு மற்றும் தேவையான உதவிகளை செய்வதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா ஆய்வு செய்தார்.

கொரோணா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 45 நாட்களுக்கு மேலாகிவிட்டது.இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தென்மாவட்டம் மற்றும் கேரளா சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி சோதனைச் சாவடியில் மருத்துவ சோதனை செய்யப்பட்டு பின்பு அவர்கள் கிருஷ்ணன் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் 15 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்வதற்காக வந்த 250 மேற்பட்டோரை தனியார் கல்லூரியில் தங்க வைத்து தினமும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

15 நாட்களுக்குப்பிறகு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றார்ப்போல் சொந்த ஊருகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். சோதனை சாவடி மற்றும் தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்க்கு சென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்துச்சென்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!