18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவேங்கடபுரத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து கபசுர குடிநீர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு தொடக்கம்..

திருவேங்கடபுரத்தில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து கபசுர குடிநீர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 11:07 pm

இராஜபாளையம் அருகே திருவேங்கடபுரத்தில் கொரோனா ஒருவர் பாதிப்பை அடுத்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கபசுர குடிநீர் வழங்கி கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாவட்டத்தின் முதல் கொரோனா நோய் ஒருவருக்கு பாதிக்கப்பட்டது அதை தொடர்ந்து இராஜபாளையம் பகுதியில் மட்டும் 8 பேர் பாதிப்பு அடைந்தனர் மாவட்டம் முழுவதிலும் தற்போதுவரை 44 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சிலர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே உள்ள திருவேங்கடபுரம் பகுதியில் 65 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த பகுதியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கிருமி நாசினி தெளித்து கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கினார் கபசுர குடிநீர் வழங்கி கிரிமிநாசினி தெளிக்கும்போது கட்சித் தொண்டர்கள் கூட்டமாக இருந்ததால் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி கூறிய சட்டமன்ற உறுப்பினர் சமூக விலகலை கடைபிடிக்கதவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தும் ஓட செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!