18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வறுமையில் வாடிய டிரம்ஸ் (பேண்ட் செட்) இசைக்கலைஞர்களுக்கு நிவாரணம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்..

வறுமையில் வாடிய டிரம்ஸ் (பேண்ட் செட்) இசைக்கலைஞர்களுக்கு நிவாரணம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 10:55 pm

144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிய டிரம்ஸ் (பேண்ட் செட்) இசைக்கலைஞர்கள் நிவாரணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்த  செய்தியின் எதிரொலியாக சட்டமன்ற உறுப்பினர் நிவாரணம் கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி, சத்திரப்பட்டி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட (பேண்ட் செட்) டிரம்ஸ் இசைக்கலைஞர்கள் 144 தடை உத்தரவு வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருவதாகவும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என 1500க்கு மேற்பட்ட கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்

இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முதற்கட்டமாக 150 இசைக் கலைஞர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார் நிவாரண பொருட்களை வழங்குவதில் சமூக வில கலை கடைபிடிக்க வலியுறுத்தி எம்எல்ஏ ஒவ்வொருவரையும் வரிசையில் நிறுத்தினார் நிவாரண உதவிகள் வாங்க சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றது நோய்த்தொற்றும் அபாயத்தை உணராமல் இருப்பது வருத்தமளிப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!