இந்த துனைமின் நிலையத்தை மையமாக வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின்தடை ஏற்படும் நிலை உள்ளது. தற்போது, கோடைகாலமாக உள்ளதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் வயோதிகர்களும், பச்சிளம் குழந்தைகளும், நோயாளிகளும் தூக்கமின்றி சொல்லொனா துயரத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கவணம் செலுத்தி இப்பகுதியில் தொடர்கதையாக தொடரும் மின்தடையை சீர்செய்து தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆத்தூர் தாலுகா பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதிப்படும் பொதுமக்கள்!
எழுதியவர்: Askar May 14, 2020, 8:15 pm

ஆத்தூர் தாலுகா பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதிப்படும் பொதுமக்கள்! திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் துனைமின்நிலையம் இயங்கி வருகிறது.



You must be logged in to post a comment.