17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளம் தென்கரை கடை வீதிகளில் உள்ள ஜவுளி மட்டும் செருப்பு கடைகள் திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தடை: அப்பகுதியில் பரப்பரப்பு!

பெரியகுளம் தென்கரை கடை வீதிகளில் உள்ள ஜவுளி மட்டும் செருப்பு கடைகள் திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தடை: அப்பகுதியில் பரப்பரப்பு!

எழுதியவர்: Askar May 14, 2020, 7:11 pm

பெரியகுளம் தென்கரை கடை வீதிகளில் உள்ள ஜவுளி மட்டும் செருப்பு கடைகள் திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தடை: அப்பகுதியில் பரப்பரப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்கரை பகுதியில் உள்ள கடை வீதிகளில் 144 தடை தளர்வு உத்தரவுப்படி ஜவுளி கடைகள் , செருப்பு கடைகள காய்கறி , மற்றும் மளிகை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வருகின்றனர் இந்நிலையில் ஜவுளி மற்றும் செருப்பு கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் மற்றும் முகக் கவசம் அணியாமல் வந்து செல்வதாகவும் தகவல் வந்ததையொட்டி பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தினால் திறக்கப்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் கடை உரிமையாளர்கள் கூட்டமாக கூடத் தொடங்கியதால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமாறன் சம்பவ இடத்திற்கு வந்து கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு கடை உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வரும் பொழுது முகக்கவசம் அணிந்திருத்தல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல் ஆய்வாளர் என அறிவுறித்தினார்.

 A. சாதிக் பாட்சா நிருபர், தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!