18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு பாஜக நிவாரணம்

மண்டபம் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு பாஜக நிவாரணம்

எழுதியவர்: mohan May 14, 2020, 6:22 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கு மாவட்ட பாஜக., சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட பாஜக., தலைவர் கே.முரளிதரன் வழங்கினார். மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஏ.பாக்யநாதன், சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன், மாவட்ட பாஜக., துணைத்தலைவர்கள் பவர் நாகேந்திரன், அமிர்தம்மாள், மண்டபம் கிழக்கு ஒன்றியத் தலைவர் சங்கரி கண்ணன், மண்டபம் நகர் தலைவர் பி.முத்துக்குமார், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பெரி.பாலசுப்ரமணியன், வார்டு செயலர் எஸ்.கண்ணன், நகர் இளைஞரணி நிர்வாகி அ.சுதாகர், மாவட்ட மகளிரணி செயற்குழு உறுப்பினர் வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!