17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும் போராடி பெற்ற சட்டங்களை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்.

கொரானா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும் போராடி பெற்ற சட்டங்களை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan May 14, 2020, 5:36 pm

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வலியுறுத்தியும், போராடி பெற்ற சட்டங்களை சலுகைகளை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கட்டுமான சங்கம்( சிஐடியு) சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.கலைச்செல்வி, டி.சிம்சன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் மார்க்ஸ், வட்டத்தலைவர் சரவணன், செல்வம் (போக்குவரத்து ஊழியர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!