உலகமே இன்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற அரசு அனைவரையும் கேட்டுக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 96வது வார்டு திருப்பரங்குன்றம் செயற்பொறியாளர் முருகன் திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் லாரி மூலமாகவே குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து வருகிறார். தள் சமயம் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் சமயோசிதமாக பழைய சைக்கிள் டயர்களை உடன் எடுத்துச் சென்று குடிநீர் சப்ளை செய்யும் பகுதியில் அந்த பழைய சைக்கிள் டயர்களை சுமார் 3 அடி இடைவெளி விட்டு வரிசையாக வைத்து, அந்த இடைவெளியில் பொதுமக்களை வரிசை படுத்துகிறார்.
மேலும் சமூக இடைவெளி பின்பற்றுவது உடன் முக கவசமும் அணிந்து வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச் செயலானது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இவரைப் போன்று பொது மக்கள் மீது அக்கறை கொண்டு அனைத்து அதிகாரிகளும் சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்ற வேண்டும் சிந்தித்து செயல்பட்டால் இந்தியாவிலிருந்து கொரொஅனோ தொற்றை அடியோடு ஒழித்து விடலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.