செங்கம் அருகே நாச்சிப்பட்டு கிராமத்தை தத்தெடுத்து ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி நிவாரண உதவிகள் வழங்கியது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் கிராமம் தத்தெடுக்கப்பட்டு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நாச்சிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக 100 சதவித வேலைவாய்ப்பு மாநில அளவில் தரப்பட்டியலில் இடம்பெறும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் திருப்பித் தருதல், இலவச யோகா பட்டயப் பயிற்சி போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு கல்லூரியிலேயே மதிய உணவு இலவசமாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. நாச்சிப்பட்டு கிராமத்தில நாட்டுநலப்பணி திட்டம் மூலம் பல்வேறு சேவை பணிகள் செய்யப்பட்டு வந்தன. நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாரியம்மன் கோவிலுக்கு பஞ்சலோக கலசம் வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு கிராம நலப் பணிகளை தொடர்ந்து செய்துவரும் நிலையில் தற்போது கொரோனா தடை உத்தரவு உள்ளநிலையில் நாச்சிப்பட்டு கிராமத்தை முழுமையாக தத்தெடுத்து 1100 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது. மேலும் கோலாந்தாங்கல், ரெட்டாலை, அம்மனூர், அமர்நாதபுதூர் கொல்லைக்கொட்டாய் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செங்கம சாலை புதுப்பாளையத்திலுள்ள 20 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரண உதவிகளை கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி வீடுவீடாக சென்று வழங்கினார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லமுத்து, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் கோபி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி, லட்சுமி கேஸ் அசோகன், ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் உள்ளிட்டோர் உடனிருந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.