கறவை பசுக்கள் மற்றும் எருமைகளின் பாலில் இயற்கையாக 85% முதல் 95% வரை தண்ணீர் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பத்தை சமாளிக்க மனிதர்களிலும் கால்நடைகளிலும், உடலில் உள்ள நீர் ஆவியாக்கப்படுகிறது.எனவே போதுமான
அளவு தண்ணீர் தங்கு தடையின்றி கிடைத்தால் மட்டுமே மாட்டினங்களில் பால் உற்பத்தி குறையாமல் பாதுகாக்க இயலும்.மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வருகின்றது.இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறைவினால், மாடுகளில் பால் உற்பத்தி குறைவது தடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.