17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாவால் தொழில் நஷ்டம்; மதுரை அச்சக அதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை

கொரோனாவால் தொழில் நஷ்டம்; மதுரை அச்சக அதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை

எழுதியவர்: mohan May 14, 2020, 11:04 am

மதுரை எஸ் எஸ் காலனி மோதிலால் மெயின் ரோடு, யோகானந்த சாமி வடக்கு மடம் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 51). தொழில் அதிபர். இவர் அந்த பகுதியில் அச்சக நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்தார்.இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இளங்கோவன் அச்சகத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தொழில் நடத்த முடியாமல் கடந்த 50 நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.இதற்கிடையே தொலைக்காட்சிகளில் “ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம்” என்ற செய்திகள் வெளியாகின.இதனால் மனவேதனை அடைந்த இளங்கோவன் நேற்று இரவு வீட்டில் கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!