18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரணம்..முடிதிருத்த நிலையங்கள் திறக்க அனுமதி கோரி முற்றுகை போராட்டம் என அறிவிப்பு..

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரணம்..முடிதிருத்த நிலையங்கள் திறக்க அனுமதி கோரி முற்றுகை போராட்டம் என அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 12:15 am

தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரி நாளை (14/05/2020) அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு.

கொரோனோ பொது முடக்கம் காரணமாக சுமார் 45 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில் சலூன் கடைகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில் தமிழகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் வேலையின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் சிவகாசியில் உள்ள 300க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக தென் மண்டல அமைப்பு செயலாளர் ஜெயரட்சகன் தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ள நிலையில் அரசின் நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்காததால் தற்போதைய சூழ்நிலையில் எந்தவித வருமானமும் இன்றி அனைவரின் குடும்பமும் வறுமையில் வாடி வருவதால் அரசு உடனடியாக சலூன் கடைகளை திறக்க வேண்டும் எனவும் தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாளை சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!