கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மஹாராஷ்டிராவில் சிக்கிக்கொண்டதை தொடர்ந்து அவரை மீட்க உதவிய கடையநல்லூர் தொகுதி அபூபக்கர் எம்எல்ஏ-வை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கிய கடையநல்லூர் தொகுதி காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் “நாங்கள் இங்கு வேலைக்கு வந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் உணவு மற்றும் அத்தியாவசிய தேவை இன்றி சிரமப்படுவதாக வாட்ஸ்அப் மூலம் வீடியோ பதிவு மூலம் தகவல் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த கடையநல்லூர் எம்எல்ஏ முகம்மது அபூபக்கர், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் மஹாராஷ்டிரா மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மானை தொடர்பு கொண்டு தமிழக இளைஞர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்துல் ரஹ்மான் உணவு ஏற்பாடு செய்ததோடு மஹாராஷ்டிரா மாநில அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
அபூபக்கர் எம்எல்ஏ தமிழக முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளருக்கு கோரிக்கை மனு அளித்து தமிழக இளைஞர்களை மீட்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மீட்கப்பட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பிய கார்த்திக் தனது தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முடிந்த (13-05-2020) புதன்கிழமை கடையநல்லூரில் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ-வை நேரில் சந்தித்து வெளி மாநிலத்தில் சிக்கி தவித்த எங்களுக்கு உணவு மற்றும் பொருளாதார உதவி மற்றும் சொந்த ஊர்களுக்கு திரும்ப அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட செயலாளர் இக்பால், நகர தலைவர் செய்யது மசூது, இளைஞரணி மாநில துணைத் தலைவர் ஹபீபுல்லா, மண்டல இளைஞரணி அமைப்பாளர் கடாஃபி, ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.