17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக விலகலை பின்பற்றி ஜவுளி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்-வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை..

சமூக விலகலை பின்பற்றி ஜவுளி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்-வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 12:02 am

தென்காசி மாவட்டத்தில் சமூக விலகல் மற்றும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி ஜவுளி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என பொது மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தளர்த்தப்பட்டு வரும் நிலையில்,தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் ஏடி நடராஜன், துணை தலைவர் சிவசக்தி முத்தையா, செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள், ஜவுளிகடை உரிமையாளர்கள், பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுத்த பல நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது‌.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பெருவாரியான பொது மக்களுக்கு தேவையான கடைகள் திறந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் நிலையில், அரசின் விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடித்து கொரோனா பரவாமல் தடுப்பதில் பங்களித்தும் வருகின்றனர். இருப்பினும் திருமணம், புதியவீடு,மத விழாக்கள் போன்றவைகளுக்கு புதிய துணிகள் எடுத்து அணிவது அவசியமாகியுள்ள நிலையில் சுரண்டையில் ஜவுளிக்கடைகள் திறக்க இதுவரை அனுமதியளிக்கப் படவில்லை.இதனால் பொது மக்களின் முக்கிய அடிப்படை தேவைகளில் உடை தேவைகள் பூர்த்தியாகவில்லை.

பொதுமக்களின் முக்கிய அடிப்படை தேவையான உடை இருப்பதால் சுரண்டையில் ஜவுளிகடைகள் மற்றும் இதுவரை திறக்க அனுமதி இல்லாத கடைகளை ஏசி இயங்காமல், சமூக விலகல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் அரசின் விதிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்க வேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!