17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பில் தேவையுடையோருக்கு நிவாரணம்..

கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பில் தேவையுடையோருக்கு நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2020, 11:56 pm

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 144 தடை உத்தரவு இருக்கும் காரணத்தினால். வாகன ஓட்டிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

இன்று (13/05/2020) கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு ரோட்டரி கிளப் தலைவர் முனியசங்கர் தலைமையில் பட்டயத்தலைவரும் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வருமான அலாவுதீன் முன்னிலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் செயலாளர் அல் நூர் ஆப்டிகல்ஸ் ஹசன், முன்னாள் தலைவர்கள் அப்ப மெடிக்கல் சுந்தரம், டாக்டர் செய்யது ராசீக்த்தீன் மற்றும் மூர் ஹசனுதீன், தவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!