18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தனது சொந்த செலவில் நிவாரணம்…

விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தனது சொந்த செலவில் நிவாரணம்…

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2020, 10:22 pm

கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான தொழில்கள் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் உதவி வருகின்றன. அந்தவகையில் விருதுநகர் அருகே வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அங்கு பயிலும் பட்டாசு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

இப்பள்ளியில் பயிலும் 185 மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்களே. ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையில்லாத காரணத்தால் இக்குழந்தைகளுக்கு அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் சூழ்நிலை நிலவி வருவதால் இப்பள்ளியிலுள்ள 6 ஆசிரியர்களும் ஒன்றினைந்து தனது சொந்த செலவில் 140 குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 1லட்சம் மதிப்புள்ள அரிசி பருப்பு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களை தலைமை ஆசிரியர் அன்பு செல்வன் தலைமையில் வழங்கினர். இதன் மூலம் இக்குழந்தைகள் ஊரடங்கு உத்தரவு காலத்தில் உணவுக்கு பற்றாக்குறை இன்றி இருக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!