18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி: இருவர் படுகாயம்..

இராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி: இருவர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் May 13, 2020, 9:34 pm

இராமநாதபுரம் எம்எஸ்கே நகரில் ஜெபக்கூடம் உள்ளது. இதன் நிறுவனர் பாஸ்டர் ஜெயசீலன். இங்கு களிமண்குண்டு கருப்பையா மகள் பிரிசில்லா 31 ஊழியராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் ஜெப்ரி ரோஹித், 5 தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். முரளி மகன் மணீஸ்குமார், 10. தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறை என்பதால் சர்ச் வளாக சுற்றுச்சுவர் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். சிமின்ட் பூசப்படாமல் இருந்த சுவர் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையில் வலுவிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக சுவர் இன்று மாலை இடிந்து விழுந்ததில் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜெப்ரி ரோஹித் உள்பட மூவரும் இடிபாடுகளில் சிக்கினர். அக்கம், பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பினர். படுகாயமடைந்த ஜெப்ரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மணிஸ்குமாருக்கு வலது கால் எலும்பு முறிவு, பிரிசில்லாவுக்கு காயம் ஏற்பட்டது. காவல் துணை கண்காணிப்பாளா வெள்ளை துரை சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்து குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!