18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கப்பலூர் டாஸ்மாக் குடோனில் திருடி மதுரையில் மதுபானம் விற்ற தந்தை – மகன் கைது

கப்பலூர் டாஸ்மாக் குடோனில் திருடி மதுரையில் மதுபானம் விற்ற தந்தை – மகன் கைது

எழுதியவர்: mohan May 13, 2020, 6:20 pm

தமிழகத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்த நிலையில் மதுரை கப்பலூர் பகுதியில் இரண்டு பேர் காரில் மதுபானம் விற்பதாக மதுவிலக்கு தடுப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து மது விலக்கு காவல் ஆய்வாளர் கவுசல்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காரில் இருந்தபடி மதுபானம் விற்ற 2 பேர் பிடிபட்டனர்.போலீசாரின் விசாரணையில் அவர்கள் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 48), தங்கரத்தினம் (வயது 25) என்பது தெரியவந்தது. மேற்கண்ட இரண்டு பேரும் தந்தை-மகன் ஆவர்.இவர்களில் ராமமூர்த்தி, கப்பலூர் மதுபான குடோனில் லோடுமேன் ஆக உள்ளார். தங்கரத்தினம் கல்லூரி படிப்பை முடித்து உள்ளார்.காரில் மதுபானம் விற்றதாக 2 பேரையும் கைது செய்த மதுவிலக்கு தடுப்பு போலீசார் அவர்களிடமிருந்து 80 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!