17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விழுப்புரம் பள்ளிமாணவிஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்ததைக் கண்டித்து தேனியில் NFIW சார்பில் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் பள்ளிமாணவிஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்ததைக் கண்டித்து தேனியில் NFIW சார்பில் ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: Askar May 13, 2020, 6:18 pm

விழுப்புரம் பள்ளிமாணவி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்ததைக் கண்டித்து தேனியில் NFIW சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஜெயஸ்ரீயை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனையை உடனே வழங்கிட வேண்டும் என NFIW தேனி மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11.00மணியளவில் மாவட்ட தலைவர் ரெஜினா பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பள்ளிமாணவி ஜெயஸ்ரீ மீது அதிமுகவின் கிளைச் செயலாளரும் – அதிமுகவின் கவுன்சிலரும் சேர்ந்து சிறுமியின் கைகளை கட்டி போட்டுபெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மனித சமூகத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த கொடூரமான குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த கலியபெருமாள் மற்றும் முருகன் மீது மிகக் கடுமையான சட்டபிரிவுகளின் வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் S. நாகம்மாள், CPI மாவட்ட துணைச் செயலாளர் கே. இளையராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் M.சுப்பிரமணி, AISF சட்டக்கல்லூரி மாணவர் பிரிவு மாநிலக்குழு உறுப்பினர் இ.ஜானகி மற்றும் பெண் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறுமிகொலைச் சம்பவத்திகு எதிராக முழக்கமிட்டனர்.

A. சாதிக்பாட்சா நிருபர், தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!