17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்:- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்:- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

எழுதியவர்: Askar May 13, 2020, 5:23 pm

அடுத்த மூன்று மாதங்களுக்கான பி.எப் தொகையை அரசே செலுத்தும்; 72 லட்சம் ஊழியர்கள் இதனால் பயனடைவார்கள். இதற்காக 2500 கோடி ஒதுக்கீடு!

  • ரூ. 200 கோடி வரையிலான அரசு கொள்முதலில் சர்வதேச டெண்டர்கள் அனுமதிக்கப்படாது.
  • வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும்.
  • நெருக்கடியில் உள்ள சிறுகுறு நிறுவங்களுக்கு சிறப்பு கடன் உதவி. இதற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் பயனடையும்.
  • சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் கடனுதவி; அடமானமாக சொத்துக்கள் எதையும் காட்டத்தேவையில்லை. உத்தரவாதத்தை அரசு வழங்கும். இதற்காக மூன்று லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
  • ஊரடங்கால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உணர்ந்துள்ளது.
  • சுய சார்பு பாரதம் என்பது பிற உலக நாடுகளில் இருந்து இந்தியாவின் உறவை துண்டிப்பது என்பதல்ல.
  • பொருளாதாரம், மக்கள் வளம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தேவை-சப்ளை ஆகிய ஐந்து தூன்களின் அடிப்படையில் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • 5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடியிலான ‘தன்னிறைவு இந்தியா’ திட்டம் உருவாக்கம்.
  • சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதே பிரதமர் மோடியின் நோக்கம்.
  • ஆத்மநிர்ப பாரத் என்பது சுயசார்பு பாரதம் என்று பொருள்படும் – தமிழ் உள்பட நான்கு மொழிகளில் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!