மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில், திருக்கடையூர் பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை 58லிருந்து 59 ஆக உயர்த்திய அதிமுக அரசை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு கண்டன முழக்கமிட்டனர். செம்பனார்கோவில் கடைவீதியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிங்காரவேலன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். திருக்கடையூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் வீ.எம்.சரவணன் தலைமை வகித்தார்.முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.ரவிச்சந்திரன் , குணசுந்தரி, அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 58 லிருந்து 59 ஆக உயர்த்திய தமிழக அரசை கண்டித்து வயிற்றில் ஈரத்துணி கட்டி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan May 13, 2020, 4:52 pm




You must be logged in to post a comment.