18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோ, கார் ,வேன்  ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவிகள்  — எம்.எல்.ஏ.வழங்கினார் 

ஆட்டோ, கார் ,வேன்  ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவிகள்  — எம்.எல்.ஏ.வழங்கினார் 

எழுதியவர்: mohan May 13, 2020, 4:33 pm

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட ஆக்கூரில்   ஆட்டோ, கார், வேன்  கனரக வாகன  ஓட்டுனர்கள், மற்றும் சலவைத் தொழிலாளிகள் முடிதிருத்துவோர்  ஆகியோருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட  நிவாரணப் பொருள்களை  எம். எல். ஏ .பவுன்ராஜ் வழங்கினார்.

தரங்கம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட ஆக்கூர் பகுதிகளிலுள்ள  ஆட்டோ, கார்,கனரக வாகன ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளி, முடி திருத்துவோர்   உள்ளிட்ட 200  பேருக்கு முகக் கவசம், அரிசி, காய்கறி மற்றும் ரூ.500 ரொக்கம்,  உள்ளிட்ட நிவாரண  பொருட்களை சமூக இடைவெளியை பின்பற்றி பூம்புகார் தொகுதி சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.இதில் செம்பை வடக்கு ஒன்றிய அஇஅதிமுக செயலாளர்  சுந்தர்ராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கபடி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!