திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் , எஸ். மேட்டுப்பட்டி ஊராட்சியில் உள்ள ஊரடங்கும் காரணமாகவும், வேலை இன்மையாலும் சிரமப்படும் ஏழை , எளிய ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள், ஒலிப்பெருக்கி பழுது பார்ப்பவர்கள், ஒலி பெருக்கி அமைப்பாளர்கள், சலூன்
கடைகாரர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன்,முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.