17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்..

காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்..

எழுதியவர்: Askar May 13, 2020, 4:42 am

காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்..

காங்கிரஸ் கட்சியின் சார்பில்,ஏழை எளிய மக்களுக்கு கொரோனா கால நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சுரண்டை அருகே உள்ள துரைச்சாமிபுரம் மற்றும் இரட்டைகுளத்தில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேலநீலிதநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர், முருகையா  முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் ஏழை எளிய பொதுமக்கள் 125 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி வழங்கினார்.

இதில், சாம்பவர் வடகரை நகர காங்கிரஸ் தலைவர் முருகன், துரைச்சாமியாபுரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூசைமணி , இரட்டை குளம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி, மகளிர் அணி தலைவி சேர்மக்கனி  உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!