17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் அருகே ஊருக்குள் புகுந்த கரடி..

விருதுநகர் அருகே ஊருக்குள் புகுந்த கரடி..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2020, 10:01 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மகாராஜபுரம் கிராமத்திற்க்குள் இறைதேடி கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம். கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கரடி,மான், சிறுத்தை,யானை,புலி காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறண்ட சூழ்நிலை நிலவுவதால் தண்ணீர் மற்றும் இறைதேடி வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வருகின்றன.

இந்நிலையில் மகாராஜபுரம் கிராமத்தில் கரடி ஒன்று இறைதேடி நேற்று இரவு ஊருக்குள் புகுந்தது பின்னர் அந்த கரடி காலை நேரம் ஆகியும் காட்டுக்குள் செல்லாமல் மகாராஜபுரம் கிராமப்பகுதியில் உள்ள முள்வேலிக்குள் படுத்து கொண்டது. அருகிலிருந்தவர்கள் கரடி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கரடியை பிடிக்க சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி சிரம்மபட்டனர்.பின்னர் இறுதியாக வலை போட்டு கரடியை பிடித்து மேற்க்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். ஊருக்குள் கரடி புகுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!