18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் உலக செவிலியர் தினம்..

இராமேஸ்வரம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் உலக செவிலியர் தினம்..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2020, 9:47 pm

இராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 85-86-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘விழுதுகள் அறக்கட்டளை’ சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

இராமேஸ்வரம் அரசு மருத்துவ மனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டனர். இராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல் ஜபார் தலைமையில் நடந்த இந்த விழாவில் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ், மருத்துவ அதிகாரி மீனா குமாரி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜான் ஆரோன் பிரபு முன்னிலை வகித்தனர். மூத்த செவிலியர்கள் கருப்பாயி, கவிதா ஆகியோர் கேக் வெட்டினர்.

விழாவில் விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன், கதிரவன், தனசேகரன், பால்ராஜ், நாகேந்திரன், இளமுருகு, துரைராஜ் உள்ளிட்டோரும், அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் பணியாளர்களும் பங்கேற்று செவிலியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!