17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்…

ஆத்தூர் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்…

எழுதியவர்: Askar May 12, 2020, 9:43 pm

ஆத்தூர் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்குதல்…

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, சிரமப்படும் அனைத்து மாற்றுத்திறகளுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருள்களை வழங்கி உதவிடுமாறு ஒட்டன்சத்திரத்தில் செயல்படும் மனிதம் நண்பர்கள் குழுவிற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு மனிதம் நண்பர்கள் குழுவில் உள்ள நண்பர்கள் அனைவரும் கடுமையாக முயற்சி செய்து ஆத்தூர் தாலுகாவில் உள்ள 120 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை (12.05.2020) இன்று சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.

வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உடனடியாக ஆத்தூர் தாலுகாவில் உள்ள சேடப்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, செம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, வலையபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய தலைவர் வனிதா, செயலாளர் ஆறுமுகவள்ளி, மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிவாரண பொருட்களை பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு உதவி செய்த மனிதம் நண்பர்கள் குழுவில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

திண்டுக்கல், பக்ருதீன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!