18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு மணி நேரத்துக்குள் டெல்லி-சென்னை சிறப்பு ரெயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்று தீர்ந்தன!

ஒரு மணி நேரத்துக்குள் டெல்லி-சென்னை சிறப்பு ரெயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்று தீர்ந்தன!

எழுதியவர்: Askar May 12, 2020, 5:13 pm

ஒரு மணி நேரத்துக்குள் டெல்லி-சென்னை சிறப்பு ரெயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்று தீர்ந்தன!

கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள இந்த காலத்தில், படிபடியாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ரெயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. தலைநகர் டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து- சென்னை சென்ரல் ரெயில் நிலையத்துக்கும், சென்ரலில் இருந்து டெல்லிக்கும் 2 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன. இந்த ரெயில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் புறப்பட்டு வருகின்றன.

சென்னையிலிருந்து டெல்லிக்கு நாளை 13-ந் தேதி புதன்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ரெயில்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட் வழங்கப்படாது என்றும் ஐ.ஆர்.டி.சி. ஆன்லைன் வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு செய்ய பலரும் போட்டி போட்டனர்.

பயணிகள் ஒரே நேரத்தில் இணைய தளத்தை நாடியதால், சர்வர் முடங்கியது. ஒரு மணி நேரத்துக்கு பின்னர் சீராகி முன்பதிவு செய்தனர். ஒரு மணி நேரத்துக்குள் டெல்லி-சென்னை சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் விற்று தீர்ந்தன.

நாளை சென்னையிலிருந்து டெல்லி செல்லக்கூடிய ரெயிலுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. ஐ.ஆர்.டி.சி இணையதளம் செயல்படவில்லை. இதற்கிடையில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியபோது மே 31-ந் தேதி வரை தமிழகத்துக்கு ரெயில், விமான சேவைகளை இயக்கவேண்டாம் என்று வலியுறுத்தினார்.

இதனால், சென்னை- டெல்லி ரெயில் சேவை தொடங்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. அதேபோல டெல்லி- சென்னை ரெயில் சேவை 15-ந் தேதி தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், ரெயில் சேவையை தள்ளி வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ரெயில்வே வாரியம் ஆலோசித்து இன்று முடிவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!