17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 144 தடை உத்தரவை மீறிய 12987பேர் மீது வழக்குப்பதிவு .

144 தடை உத்தரவை மீறிய 12987பேர் மீது வழக்குப்பதிவு .

எழுதியவர்: mohan May 12, 2020, 12:02 pm

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 10.05.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 12987 நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்து, அவர்களிடமிருந்து 6664 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 நபர்களை கைது செய்து, 5 லிட்டர் கள்,10 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!