24 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்..

பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்..

எழுதியவர்: mohan May 12, 2020, 10:58 am

சோலைசேரி சேகரம் குறிச்சான்பட்டி டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு பள்ளி நலக்குழு மற்றும் சபை மக்கள் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மற்றும் மசாலா பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேல் தலைமையில் நடந்தது. தாளாளர் ஜெபசிங் முன்னிலை வகித்தார். சேகர குரு அருள்திரு தியாகராஜன் ஜெபித்து துவக்கி வைத்தார் தலைமையாசிரியர் பால்ராஜ் வரவேற்றார். 70 பள்ளி மாணவர்களுக்கு அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல் நிவாரண உதவிகள் வழங்கி பெற்றோர்கள் கொரோனாவை தடுக்க அரசு வழங்கியுள்ள விதிகள் படி முககவசம் அணியவும், கைகளை கழுவவும், சமூக விலகலை கடைபிடிக்கவும் அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சியில் தொழிலதிபர் செல்வின் மணி முத்து, சேகர செயலாளர் தாமஸ், சேகர நிர்வாகிகள் எபனேசர் முத்தையா, காசித்துரை, துரைசாமி, நாட்டாமை அமல்ராஜ், சேகர பொருளாளர் கிருபாகரன், ஜெயபால், சபை ஊழியர்கள் ஜெயசீலன், செல்வின் பெனடிட்,  ஆசிரியர்கள் டெல்பின் ரீபா, மணிமேகலை, பாலின் பிரேமா, வின்னரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே சோலைச்சேரி சேகரத்தில் உள்ள டிடிடிஏ பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகள்  குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!