18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை பெரியார் பேருந்து நிலைய வெளி மாநில ஊழியர்கள் திடீர் போராட்டம்..

மதுரை பெரியார் பேருந்து நிலைய வெளி மாநில ஊழியர்கள் திடீர் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2020, 11:34 pm

கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் பல சிரமங்களுடன் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று (11/05/2020) மாலை மதுரை பெரியார் பேரூந்து நிலையத்தில் பணியாற்றி வரும் வடநாட்டு தொழிலாளர்கள் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, ஆகையால் உடனடியாக தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என 300கும் மேலான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அறிந்த காவல்துறை துணை ஆணையர் வேணுகோபால் மற்றும் திலகர் திடல் காவல்துறை அதிகாரிகள் தொழிலார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக அவரவர்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என உத்திரவாதம் அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!