18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்னமராவதியில் விஸ்வகர்மா நகை தொழிலாளர்களுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது!

பொன்னமராவதியில் விஸ்வகர்மா நகை தொழிலாளர்களுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது!

எழுதியவர்: Askar May 11, 2020, 7:14 pm

பொன்னமராவதியில் விஸ்வகர்மா நகை தொழிலாளர்களுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் 120 நபர்களுக்கு சொர்ணம் மஹாலில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு வழங்கி துவக்கி வைத்தார். உடன் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இதில் நகைக்கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!